இன்று வெளியாகிறது வலிமை இரண்டாவது சிங்கிள்! – வெறித்தனமான வெயிட்டிங்கில் ரசிகர்கள்!

Webdunia
புதன், 1 டிசம்பர் 2021 (12:44 IST)
அஜித் நடித்துள்ள வலிமை படத்தின் இரண்டாவது சிங்கிள் இன்று வெளியாகவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில் ரசிகர்கள் ஆர்வமாக காத்துள்ளனர்.

மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள படம் அஜித்குமார் நடிப்பில் உருவாகி வரும் வலிமை. இப்படத்தை ஹெச்.வினோத் இயக்கி வருகிறார். இப்படத்தை மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் தயாரிக்கிறார். இந்த படத்தின் ரிலீஸ் மற்றும் இறுதிக்கட்ட வேலைகள் தற்போது நடைபெற்று வருகின்றன.  பொங்கல் பண்டிகைக்கு வலிமை படம் வெளியாக உள்ளது.

ஏற்கனவே இந்த படத்தின் மோஷன் போஸ்டர் மற்றும் வேற மாரி என்ற பாடல் மற்றும் கிளிம்ப்ஸ் வீடியோ வெளியாகியுள்ளது. இந்நிலையில் இன்று மாலை 7 மணிக்கு வலிமை படத்தின் இரண்டாவது சிங்கிள் வெளியாக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த பாடம் அம்மா பாசத்தை மையப்படுத்திய பாடல் என்று பேசிக் கொள்ளப்படுகிறது. இந்நிலையில் இது ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்