வலிமை படத்தில் ’நாங்க வேற மாறி’ பாடல் நீக்கமா?

Webdunia
சனி, 26 பிப்ரவரி 2022 (08:27 IST)
2 மணி நேரம் 55 நிமிடங்கள் ஓடும் வலிமை படத்திலிருந்து 12.5 நிமிட காட்சிகள் நீக்கப்பட்டுள்ளது. 

 
வலிமை திரைப்படம் நேற்று முந்தினம் வெளியாகிய நிலையில் அண்ணாத்த (ரூ.35 கோடி) மற்றும் மாஸ்டர் (ரூ. 34.80 கோடி) ஆகிய படங்களின் வசூல் சாதனையை வலிமை முறியடித்துள்ளதாக கூறப்படுகிறது. ஆனால், இரண்டாம் பாதி மிகவும் நீளமாக இருப்பதாகவும் குறிப்பாக சென்டிமென்ட் காட்சிகள் படத்தின் விறுவிறுப்பை குறைப்பதாகவும் பெரும்பாலான விமர்சகர்கள் கருத்து தெரிவித்தனர். 
 
இந்நிலையில் 2 மணி நேரம் 55 நிமிடங்கள் ஓடும் வலிமை படத்திலிருந்து 12.5 நிமிட காட்சிகள் நீக்கப்பட்டுள்ளது. நீக்கப்பட்ட புதிய வெர்ஷன் இன்று முதல் திரையரங்குகளில் திரையிடப்படும் என படக்குழு தெரிவித்துள்ளது. இதேபோல், இந்தியில் 15 நிமிட காட்சியை நீக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி ’நாங்க வேற மாறி’ பாடலையும் நீக்கியுள்ளதாகவும் சொல்லப்படுகிறது. 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்