'வலிமை' படத்தை கலாய்த்த புளூ சட்டை மாறன்…

வெள்ளி, 25 பிப்ரவரி 2022 (23:01 IST)
நடிகர் அஜித்குமார் நடிப்பில் ஹெச்.  வினோத் இயக்கத்தில்  நேற்று வெளியான படம் வலிமை. இப்படத்திற்கு  மிகப்பெரிய ஓபனிங் கிடைத்துள்ளதால், படக்குழுவினரும் ரசிகர்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

இந்நிலையில் வலிமை படம் நேற்று ஒரே நாளில் சுமார் ரூ.36.17 கோடி தமிழகம் முழுவதும் வசூல் குவித்துள்ளதாக கூறப்படுகிறது. சூப்பர் ஸ்டார் ரஜினியின் அண்ணாத்தை படம் இதற்கு முன் ஒரே நாளில் ரூ.34.92 கோடியும்,  விஜய் நடித்த சர்க்கார் படம் ரூ.34 கோடியும் வசூலீட்டியதாகவும் கூறப்படுகிறது.

இப்படத்திற்கு கலவையான விமர்சனங்கள் வருகிறது. இந்நிலையில், ஏற்கனவே இப்படத்தைப் பற்றி எதிர்மறையான விமர்சனம் கொடுத்த புளூ சட்டை மாறன் தந்து டுவிட்டர் பக்கத்தில் ஒரு பதிவிட்டுள்ளார். அதில், பரோட்டாவிற்கு மாவு பிசையும் இந்த டான்ஸை தியேட்டரில் சிரிக்காமல் பார்த்தவர்கள் யார்? என வலிமை படத்தில் இடம்பெற்ற பாடலை கிண்டலடித்துள்ளார்.  

பரோட்டாவிற்கு மாவு பிசையும் இந்த டான்ஸை தியேட்டரில் சிரிக்காமல் பார்த்தவர்கள் யார்? pic.twitter.com/jS6MSuywCs

— Blue Sattai Maran (@tamiltalkies) February 25, 2022

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்