ரஜினியுடன் பேசினேன்.. அவர் சக்தியை செலவழிக்க விரும்பவில்லை: வைரமுத்து

Mahendran
வெள்ளி, 4 அக்டோபர் 2024 (12:09 IST)
சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் பேசியதாகவும் ஆனால் அதிக நேரம் பேசி அவரது சக்தியை செலவழிக்க விரும்பவில்லை என்பதால் குறைந்த நேரம் மட்டுமே பேசியதாகவும் கவிப்பேரரசு வைரமுத்து தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளார், இது குறித்து அவர் மேலும் கூறியதாவது:
 
அன்பு நண்பர் 
திரு. ரஜினிகாந்த்
மருத்துவமனையிலிருந்து 
பேசினார்
 
திடமாகவும் கம்பீரமாகவும்
வழக்கம்போல் ஒலித்தது
அவர் குரல்
 
“எப்படி இருக்கிறீர்கள்” என்றேன்
 
“நன்றாக இருக்கிறேன்;
ஆனால், களைப்பாக இருக்கிறேன்”
என்றார்
 
“எப்போது
வீடு திரும்புவீர்கள்” என்றேன்
 
“ஓரிரு நாளில்” என்றார்
 
“உள்ளம் உடல் இரண்டும் நலமுற
நல்ல ஓய்வுகொள்ள வேண்டும்”
என்றேன்
 
அதிக நேரம் பேசி
அவர் சக்தியைச்
செலவழிக்க விரும்பவில்லை
 
வாழ்த்துச் சொல்லி
இணைப்பை 
நிறைவு செய்தேன் 
 
ஆகவே அன்பர்களே!
 
என்
உள்ளறிவு உணர்ந்தவரையில்
அவர் பாதிப்பிலிருந்து
மீண்டுவிட்டார்
 
கடந்த சிலநாட்களாய்
ஊருக்குப் போயிருந்த 
உங்கள் புன்னகை
மீண்டும் 
உதட்டுக்குத் திரும்பட்டும்
 
அந்த 
விறுவிறுப்பான
மின்சார மனிதனை
விரைவில் பார்க்கலாம்
 
வாருங்கள் ரஜினி;
காத்திருக்கிறது கலைஉலகு
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்