எளிமையாக நடந்து முடிந்த விஜய்யின் அடுத்த பட பூஜை!

vinoth
வெள்ளி, 4 அக்டோபர் 2024 (11:37 IST)
நடிகர் விஜய் நடிப்பில் இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் ‘The GOAT’  உருவான கோட் திரைப்படம் வெளியாகி வசூல் ரீதியாக வெற்றி பெற்றுள்ளது. படம் 450 கோடி ரூபாய் அளவுக்கு வசூலித்துள்ளதாக சொல்லப்படுகிறது. கோட் படத்துக்குப் பிறகு விஜய், ஹெச் வினோத் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கவுள்ளார்.

இந்த படம் முடிந்ததும் அவர் சினிமாவை விட்டு முழு நேர அரசியலுக்கு செல்லவுள்ளார். இந்த படத்துக்கு அனிருத் இசையமைக்க KVN புரொடக்‌ஷன்ஸ் என்ற நிறுவனம் தயாரிக்கிறது. இந்த படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் ஒரு போஸ்டரோடு வெளியானது. இந்த படத்தில் விஜய்க்கு வில்லனாக பாபி தியோல் நடிக்கிறார். பிரகாஷ் ராஜ், கௌதம் மேனன், நரேன், பூஜா ஹெக்டே மற்றும் மமிதா பைஜு உள்ளிட்டவர்கள் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.

இந்நிலையில் இன்று இந்த படத்தின் பூஜை சென்னையில் எளிமையாக நடந்து முடிந்துள்ளது. இது சம்மந்தமான புகைப்படம் இணையத்தில் வைரல் ஆகிவருகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்