"வேட்டையன்" படத்தில் இடம்பெற்ற என்கவுன்டர் சம்பவங்களுக்கான வசனங்களை நீக்க வேண்டும் என்ற கோரிக்கை விடுத்து மதுரையைச் சேர்ந்த பழனிவேலு என்பவர் மதுரை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார். என்கவுன்டர் வசனங்களை நீக்கும் வரை படத்தைத் தடை செய்யவேண்டும் என்று அவர் தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார். "வேட்டையன்" படத்திற்கு தடை கோரிய மனு இன்றே விசாரணைக்கு வருகிறது.
ரஜினிகாந்த், அமிதாப்பச்சன், பகத் பாஸில், ராணா டகுபாய், மஞ்சு வாரியர், ரித்திகா சிங், துஷாரா விஜயன், கிஷோர், ரோகினி, ரமேஷ் திலக், ரக்சன், ஜிஎம் சுந்தர் உள்பட பலர் இந்த படத்தில் நடித்துள்ளனர்.