வடிவேலு அண்ணே..! குரலை கேட்டதும் கண்ணீர் விட்ட வெங்கல் ராவ்! – நிதியுதவி செய்த வடிவேலு!

Prasanth Karthick
வெள்ளி, 28 ஜூன் 2024 (19:28 IST)
பிரபல நகைச்சுவை நடிகர் வெங்கல் ராவ் மருத்துவ உதவிக்காக நடிகர் வடிவேலு ரூ.1 லட்சம் நிதியுதவி செய்துள்ளார்.



தமிழ் சினிமாவில் முக்கியமான நகைச்சுவை நடிகர்களான வடிவேலு, விவேக் போன்றவர்களுடன் பல உப காமெடி நடிகர்களும் தொடர்ந்து நடித்து வந்தனர். அப்படியாக வடிவேலுவின் காமெடியன்ஸ் யுனிட்டில் பல முக்கியமான காமெடி காட்சிகளில் நடித்தவர் வெங்கல் ராவ். விவேக்குடனும் சிங்கம் உள்ளிட்ட படங்களில் காமெடி காட்சிகளில் நடித்தவர்.

தற்போது நடிகர் வெங்கல் ராவ் கை, கால்கள் செயலிழந்து மருத்துவ உதவிகளுக்கே மிகவும் கஷ்டப்பட்டு வருகிறார். சமீபத்தில் தனது நிலை குறித்து அவர் வீடியோ வெளியிட்டிருந்தது, பலரையும் வருத்தத்தில் ஆழ்த்தியிருந்தது. இந்நிலையில் அவருக்கு நடிகர் சிம்பு, ஐஸ்வர்யா ராஜேஷ், KPY பாலா உள்ளிட்ட பலர் நிதியுதவி செய்திருந்தனர்.

இந்நிலையில் தன்னுடன் நடித்த வெங்கல் ராவுக்கு வடிவேலு தற்போது ரூ.1 லட்சம் நிதியுதவி வழங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும் வெங்கல் ராவுக்கு வடிவேலு போன் செய்து நலம் விசாரித்ததோடு, நலம் பெற வேண்டும் என வேண்டிக் கொள்வதாகவும் தெரிவித்துள்ளார் என வெங்கல் ராவின் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்