மேடையில் அஞ்சலியைத் தள்ளிவிட்டு அநாகரிகமாக நடந்துகொண்ட பாலகிருஷ்ணா… ரசிகர்கள் கண்டனம்!

vinoth

வியாழன், 30 மே 2024 (08:17 IST)
ஆந்திராவை சேர்ந்த நடிகை நடிகை அஞ்சலி தமிழ், தெலுங்கு மொழி படங்களில் நடித்து வருகிறார். குறும்படங்களில் நடிக்கத் தொடங்கி சினிமா வாய்ப்புகளை பெற்றார். அதையடுத்து கற்றது தமிழ், ஆயுதம் செய்வோம் , அங்காடித்தெரு ,  எங்கேயும் எப்போதும், மங்காத்தா, தரமணி உள்ளிட்ட பல படங்களில் நடித்திருக்கிறார்.

இவர் எங்கேயும் எப்போதும் படத்தில் நடித்த போது ஜெய் மீது காதலில் விழுந்து தொடர்ந்து பல வருடம் லிவிங் டூ கெதரில் வாழ்ந்து பின்னர் பிரிந்துவிட்டனர். அதனால் சில ஆண்டுகள் தமிழ் சினிமாவில் நடிக்காமல் இருந்தார். இப்போது ஏழு மலை ஏழு கடல் படத்தில் நடித்து முடித்துள்ளார்.

தெலுங்கில் இவர் கதாநாயகியாக நடித்துள்ள கேங்ஸ் ஆஃப் கோதாவரி என்ற படத்தின் ப்ரமோஷன் நிகழ்ச்சி நடைபெற்ற போது அதில் சிறப்பு விருந்தினராக நடிகர் பாலகிருஷ்ணா கலந்துகொண்டார். அப்போது அவர் மேடையில் ஏறும் அங்கிருந்த அஞ்சலியை தள்ளி நிற்க சொன்னார். அவரும் சற்று தள்ளி நின்றார். ஆனால் அவரை மேலும் தள்ளி நிற்க சொல்லி பாலகிருஷ்ணா பிடித்து ஆவேசமாக தள்ளினார். இதனால் அஞ்சலி தடுமாறி பின்னர் சுதாரித்துக் கொண்டார். இந்த வீடியோ சமூகவலைதளப் பக்கங்களில் பரவி இப்போது பாலகிருஷ்ணாவுக்கு கண்டனங்களை எழுப்பி வருகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்