வாடிவாசல் இசை ஆல்பத்தை வாங்க போட்டா போட்டி: ஜிவி பிரகாஷ் தகவல்!

Webdunia
புதன், 30 மார்ச் 2022 (17:57 IST)
சூர்யா நடிப்பில் வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாக இருக்கும் வாடிவாசல் படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது
 
இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைக்க உள்ளார் என்பதும் அவர் ஏற்கனவே இந்த படத்திற்காக இரண்டு பாடல்களை கம்போஸ் செய்து முடித்து விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் சமீபத்தில் அளித்த பேட்டியில் வாடிவாசல் படத்தின் இசை ஆல்பத்தை வாங்க முன்னணி இசை நிறுவனங்கள் போட்டா போட்டி போடுகின்றன என்பதும் அது தனக்கு மிகுந்த மகிழ்ச்சி அளிப்பதாகவும் ஜிவி பிரகாஷ் கூறியுள்ளார் 
 
ஒரு படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் முன்பே பாடல்கள் தயாராகும் முன்பே அந்த பாடல்கள் ஆல்பத்தை வாங்க முன்னணி நிறுவனங்கள் போட்டி போடுவது ஆச்சரியத்தை அளித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்