மீண்டும் பாலா – சூர்யா கூட்டணி! – சூர்யா 41 அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

திங்கள், 28 மார்ச் 2022 (10:39 IST)
நடிகர் சூர்யாவின் 41வது படத்தை பாலா இயக்க உள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

நடிகர் சூர்யா – இயக்குனர் பாலா கூட்டணியில் முன்னதாக நந்தா, பிதாமகன் உள்ளிட்ட படங்கள் வெளியாகி வசூலிலும், விமர்சனத்திலும் நல்ல வரவேற்பை பெற்றன. அதற்கு பிறகு இருவரும் வெவ்வேறு பட பணிகளில் பிஸியான நிலையில் இதுவரை மீண்டும் இணைந்து படம் செய்யாமல் இருந்து வந்தனர்.

மீண்டும் இருவர் கூட்டணியில் படம் எப்போது வெளியாகும் என ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில் சூர்யாவின் 41வது படத்தை பாலா இயக்குவதாக சினிமா வட்டாரங்களில் பேசிக் கொள்ளப்பட்டது. இந்நிலையில் தற்போது இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை சூர்யாவின் 2டி எண்டெர்டெயின்மெண்ட்ஸ் வெளியிட்டுள்ளது. இந்த படத்தின் படப்பிடிப்பு பணிகள் இன்று தொடங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்