அண்ணன் வந்தா Atom Bombu டும்மு: இணையத்தை கலக்கும் #VaathiStepu

Webdunia
சனி, 14 மார்ச் 2020 (09:56 IST)
விஜய்யின் மாஸ்டர் பட வாத்தி இஸ் கமிங் பாடலின் டான்ஸ் ஸ்டெப் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

லோகேஷ் கானகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்து வெளியாகவுள்ள படம் “மாஸ்டர்”. இந்த படத்தில் விஜய் பாடியுள்ள குட்டி ஸ்டோரி பாடல் ஏற்கனவே வெளியாகி பட்டித்தொட்டியெங்கும் ஹிட் அடித்துள்ள நிலையில் இரண்டாவது பாடலான ‘வாத்தி இஸ் கமிங்’ பாடல் சில நாட்களுக்கு முன்பு வெளியானது.

அந்த பாடலில் அனிருத் தோள்பட்டயை ஆட்டி போடும் டான்ஸ் ஸ்டெப் வைரலாகி உள்ளது. இந்நிலையில் சோனி ம்யூசிக் நிறுவனம் வாத்தி ஸ்டெப் சேல்ஞ்ச் அறிவித்தது. அதை தொடர்ந்து பலரும் #VaathiStepu என்ற ஹேஷ்டேகில் தாங்களும் அதுபோல டான்ஸ் ஆடி சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருகின்றனர்.

சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து வயதினரும் ஆடும் இந்த டான்ஸ் வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்