இத்துணூண்டு முத்தத்துல இஷ்டம் இருக்கா..? செல்பி எடுக்க வந்த ரசிகையை லிப் கிஸ் அடித்த உதித் நாராயண்! - வைரலாகும் வீடியோ!

Prasanth Karthick
சனி, 1 பிப்ரவரி 2025 (19:42 IST)

பிரபல திரையிசை பாடகரான உதித் நாராயண் ஒரு இசை நிகழ்ச்சியில் ரசிகைக்கு உதட்டில் முத்தம் கொடுத்த விவகாரம் பூதாகரமாகியுள்ளது.

 

இந்திய சினிமாவில் பல மொழிகளில் பிரபலமான பாடகராக உள்ளவர் உதித் நாராயண். இந்தியில் பல பாடல்களை பாடி புகழ்பெற்ற உதித், தமிழிலும் ‘காதலிக்கும் பெண்ணின் கைகள்’, ‘இத்துனூண்டு முத்தத்துல இஷ்டம் இருக்கா?’, ‘காதல் பிசாசே’ என பல ஹிட் பாடல்களை பாடியுள்ளார்.

 

சமீபத்தில் உதித் நாராயணின் இசை நிகழ்ச்சி ஒன்று நடந்தபோது அவர் இந்தியில் ‘டிப்பு டிப்பு பர்சா பாணி’ என்ற பாடலை பாடிக் கொண்டிருந்தார். அப்போது இளம்பெண் ஒருவர் உதித் நாராயண் கூட செல்பி எடுக்க வந்தார். உதித் நாராயணும் போஸ் கொடுத்தபோது அந்த ரசிகை உதித்தின் கன்னத்தில் முத்தமிட்டார். உடனே சற்றும் தாமதியாமல் உதித் அந்த பெண்ணை வளைத்து உதட்டில் முத்தம் கொடுத்துவிட்டார். இது பலருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தினாலும் அந்த பெண் சிரித்துக் கொண்டே சென்றுவிட்டார்.

 

ஆனாலும் அந்த நிகழ்ச்சியில் உதித் மேலும் பல ரசிகைகளை முத்தமிட்டுள்ளார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் நிலையில், உதித் நாராயண் செய்தது தவறு என்று பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

 

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்