மாறன் படத்திற்கு ஸ்பெஷல் எமோஜி விட்ட ட்விட்டர்! – தனுஷ் ரசிகர்கள் மகிழ்ச்சி

Webdunia
திங்கள், 28 பிப்ரவரி 2022 (09:59 IST)
தனுஷ் நடித்து வெளியாகவுள்ள மாறன் திரைப்படத்திற்கு ட்விட்டர் ஸ்பெஷல் எமோஜி ஒன்றை வெளியிட்டுள்ளது.

தனுஷ் நடிப்பில் கார்த்திக் நரேன் இயக்கியுள்ள படம் மாறன். இதில் மாளவிகா மோகனன் தனுஷுக்கு ஜோடியாக நடிக்கிறார். சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிக்கும் இந்த படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார்.

இந்த படத்தின் முதல் சிங்கிள் சமீபத்தில் வெளியாகி பெரும் ட்ரெண்டான நிலையில் படத்தின் ட்ரெய்லர் இன்று வெளியாக உள்ளது. இந்நிலையில் ரசிகர்கள் மாறன் படத்திற்கான ஹேஷ்டேகை ட்விட்டரில் ட்ரெண்ட் செய்து வருகின்றனர். இதனால் ட்விட்டர் மாறன் ஹேஷ்டேகிற்கு தனுஷ் படத்தை ஸ்பெஷல் எமோஜியாக வெளியிட்டுள்ளது. இது ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்