தனுஷின் ‘நானே வருவேன்’ ஒளிப்பதிவாளர், ஸ்டண்ட் மாஸ்டர் அறிவிப்பு!

சனி, 26 பிப்ரவரி 2022 (08:09 IST)
தனுஷின் நானே வருவேன் படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தின் ஒளிப்பதிவாளர் மற்றும் ஸ்டண்ட் இயக்குனர் குறித்த தகவல் தற்போது வெளிவந்துள்ளது 
 
தனுஷின் நானே வருவேன் என்ற திரைப்படத்தின் ஒளிப்பதிவாளர் ஓம்பிரகாஷ் என்றும் ஸ்டண்ட் இயக்குனர் திலிப் சுப்புராயன் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது
 
இவர்கள் இருவருமே பல வெற்றி படங்களில் பணிபுரிந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது 
 
தனுஷ் ஜோடியாக பிகில் படத்தில் நடித்த இந்துஜா நடித்து வரும் நிலையில் இந்த படத்திற்கு இசையமைப்பாளராக யுவன் சங்கர் ராஜா பணிபுரிந்து வருகிறார் 
கலைப்புலி எஸ் தாணு அவர்கள் தயாரிப்பில் உருவாகும் இந்த படத்தில் தனுஷ் இரட்டை வேடங்களில் நடித்து வருவதாக கூறப்படுகிறது
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்