இந்தியன் 2 வில் திரிஷாவா? முன்னணி நடிகை விலகல்!

Webdunia
செவ்வாய், 16 நவம்பர் 2021 (10:07 IST)
இந்தியன் 2 படத்தில் சில காட்சிகளில் நடித்திருந்த காஜல் அகர்வால் அந்த படத்தில் இருந்து விலக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கமல்ஹாசன் நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் ’இந்தியன் 2’ படத்தை முடிக்காமல் ஷங்கர் வேறு படத்தை இயக்க திட்டமிட்டுள்ளார். இதனை எதிர்த்து லைக்கா நிறுவனம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இது சம்பந்தமாக மத்தியஸ்தர் ஒருவரை சென்னை உயர்நீதிமன்றம் சமீபத்தில் நியமனம் செய்தது. பல கட்ட பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு இப்போது இந்தியன் 2 டிசம்பர் மாதத்துக்குப் பின் தொடங்கப்பட வாய்ப்புள்ளதாக தெரிகிறது.

இந்நிலையில் படத்தில் முதலில் கதாநாயகியாக ஒப்பந்தம் ஆன காஜல் அகர்வால் அந்த படத்தில் இருந்து விலக முடிவு செய்துள்ளதாகவும், அவருக்குப் பதிலாக அந்த கதாபாத்திரத்தில் திரிஷா நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளதாகவும் சொல்லப்படுகிறது. மேலும் காஜல் நடித்திருந்த சில காட்சிகளும் திரும்ப படப்பிடிப்பு நடத்தப்படும் எனவும் சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்