தமிழ் சினிமாவை காப்பற்றுமாறு வேண்டுகோள் விடுத்த இயக்குநர் ஷங்கர்

Webdunia
திங்கள், 3 ஜூலை 2017 (10:55 IST)
இயக்குநர் சங்கர் இயக்கத்தில் ரஜினியின் 2.0 படத்தின் அனைத்து வேலைகளும் முடிந்து, புரோமோஷன் பணிகள் நடைபெர்று வருகின்றன. மத்திய அரசின் ஜிஎஸ்டி வரி விதிப்பினால் தமிழ் திரையுலகம் பாதிக்கப்படுவதாக இயக்குநர் ஷங்கர் கருத்து தெரிவித்துள்ளார்.

 
மத்திய அரசின் நடவடிக்கையால் நாடு முழுவதும் ஜிஎஸ்டி வரி விதிப்பு முறையின் கீழ் வந்துள்ளனர். இந்நிலையில் தமிழ்  திரையுலகிற்கு 48-58% அதிக வரி என்பதனையும், தமிழ் திரையுலகைக் காப்பாற்றுங்கள் என இயக்குநர் ஷங்கர் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
 
மத்திய அரசின் ஜிஎஸ்டி வரி விதிப்பில் திரைத்துறைக்கு 28% வரி விதிக்கப்பட்டுள்ளது. இதனுடன் மாநில அரசின் நகராட்சி வரியும் விதிக்கப்படுகிறது. இரு அரசுகளின் வரி விதிப்பால் திரைத்துறை மிகவும் பாதிக்கப்படும் என திரையுலகினர் கடும் எதிர்ப்புத் தெரிவித்துவருகின்றனர்.

 
தமிழகம் முழுவதும் இன்று முதல் காலவரையற்ற திரையரங்குகளை மூடுவது என அறிவிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
அடுத்த கட்டுரையில்