துப்பாக்கி படத்தின் ரொமான்டிக் Unseen வீடியோ இணையத்தில் வைரல்!

Webdunia
புதன், 17 மே 2023 (14:53 IST)
நடிகர் விஜய் நடிப்பில் கடந்த 2012ம் ஆண்டு வெளியான திரைப்படம் துப்பாக்கி. இந்த திரைப்படத்தில் விஜய், காஜல் அகர்வால் ஆகியோர் நடித்திருந்தனர். இப்படத்தை ஏ. ஆர். முருகதாஸ் அவரது உதவி இயக்குனரின் கதையை இயக்கினார். ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்து வெளிவந்த திரைப்படம் மாபெரும் ஹிட் அடித்தது. 
 
ஜகதீஷ் என்ற கேரக்டரில் விஜய் நடித்திருந்தார். இராணுவத்தில் வேலை செய்யும் ஜகதீஷ் (விஜய்) விடுமுறைக்கு மும்பைக்கு வருகிறார். அங்கே பெண் பார்ப்பது, முதலில் மோதல், பிறகு காதல் என காட்சிகள் நகர, திடீர் என வெடிக்கிறது ஒரு வெடிகுண்டு. வெடிகுண்டை வைத்தவன் விஜய்யிடம் சிக்க, அவனது திட்டங்களைத் தெரிந்து கொள்கிறார் விஜய். சதித் திட்டங்களை முறியடிக்க தன்னுடன் பணியாற்றும் இராணுவ வீரர்களின் துணையுடன் அதனை முறியடிக்கிறார். 
 
கோபமடைந்த தீவிரவாதி தலைவன் விஜய்யையும், விஜய் தீவிரவாதி தலைவனையும் தேட, கடைசிக் காட்சியில் இருவரும் சந்திக்கின்றனர். விஜய் தீயவனை அழிக்கிறார். மாபெரும் ஹிட் அடித்த இப்படத்தின் அன்ஸீன் வீடியோ ஒன்று சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

https://publish.twitter.com/?query=https%3A%2F%2Ftwitter.com%2FThenmozhiVFC%2Fstatus%2F1658665021650481154&widget=Tweet

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்