ஓடிடியில் ஒரே நாளில் வாரிசு-துணிவு: மீண்டும் போட்டியா?

Webdunia
வெள்ளி, 20 ஜனவரி 2023 (13:56 IST)
திரையரங்குகளில் வாரிசு மற்றும் துணிவு ஒரே நாளில் ரிலீசான நிலையில் ஓடிடியிலும் இரு படங்களும் ஒரே நாளில் ரிலீஸ் ஆக இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. 
 
ஜனவரி 11ஆம் தேதி அஜித் நடித்த துணிவு மற்றும் விஜய் நடித்த வாரிசு ஆகிய இரண்டு திரைப்படங்களும் திரையரங்குகளில் வெளியாகி இரண்டு படங்களுமே 200 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்துள்ளன. 
 
இந்த நிலையில் பிப்ரவரி 10ஆம் தேதி வாரிசு திரைப்படம் அமேசான் ஓடிடியிலும் துணிவு திரைப்படம் நெட்பிளிக்ஸ் ஓடிடியிலும் வெளியாக இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன 
 
திரையரங்குகளில் ஒரே நாளில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பரபரப்பு ஏற்படுத்திய நிலையில் தற்போது ஓடிடியிலும் ஒரே நாளில் வழியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்