செய்தி வாசிப்பாளராக இருந்து பிரபலமானவர் அனிதா சம்பத். குட்டியாக கியூட்டான பெண்ணாக இருப்பதாலே இவருக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் உருவாகினர். சமூகவலைத்தளங்களில் இதுவரை ரசிகர்கள் பெருமளவில் பிரபலப்படுத்தினர்.
அதன் பிறகு காப்பான், சர்க்கார் உள்ளிட்ட சில படங்களில் செய்தி வாசிப்பாளினியாகவே நடித்தார். தொடர்ந்து விஜய் டிவியில் பிக்பாஸ் வாய்ப்பு கிடைத்தது அதை சரியாக பயன்படுத்திக்கொண்டார்.
அதை தொடர்ந்து திரைப்படங்களில் நடிகையாக நடித்து வருகிறார். இதனிடையே சொந்தமான பெண்களுக்கான துணிக்கடை ஒன்றை நடத்தி வருகிறார். இந்நிலையில் தற்போது வித விதமான பாவாடை தாவணி அணிந்து எடுத்துகொண்ட லேட்டஸ்ட் வீடியோ ஒன்றை வெளியிட்டு நெட்டிசனைகள் கவனத்தை ஈர்த்துள்ளார்.