தக் லைஃப் பட ஷூட்டிங்கில் இளமையான தோற்றத்தில் கமல் & சிம்பு… வைரலாகும் போட்டோ!

vinoth
திங்கள், 6 மே 2024 (09:41 IST)
கமல்ஹாசன், மணிரத்னம் கூட்டணியில் உருவாகி வரும் 'தக் லைஃப்'  படத்தின் ஷூட்டிங் தற்போது செர்பியாவில் நடந்து வருகிறது. இந்த படத்தில் கமல்ஹாசனோடு திரிஷா, துல்கர் சல்மான் மற்றும் ஜெயம் ரவி ஜோஜு ஜார்ஜ், கௌதம் கார்த்திக் மற்றும் ஐஸ்வர்யா லஷ்மி உள்ளிட்டோர் நடிக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டது.

ஆனால் இந்த படத்தில் இருந்து துல்கர் சல்மான் மற்றும் ஜெயம் ரவி விலகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அவர்கள் கொடுத்த தேதியில் தக்லைஃப் படக்குழுவினரால் அவர்களை வைத்து ஷூட்டிங் எடுக்க முடியாததால் அவர்கள் படத்தில் இருந்து விலகியதாக சொல்லப்பட்ட நிலையில் இப்போது அவர்கள் மீண்டும் இணைந்துள்ளதாக ஒரு தகவல் பரவி வருகிறது. இந்நிலையில் படத்தில் சிம்பு ஒரு முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் வட இந்தியாவில் டெல்லி மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் இந்த படத்தின் ஷூட்டிங் நடந்து வருகிறது. இந்நிலையில் ஷூட்டிங் ஸ்பாட்டில்  கமல்ஹாசன், அபிராமி, நாசர், சிம்பு மற்றும் வையாபுரி ஆகியோர் இருக்கும் புகைப்படம் ஒன்று இணையத்தில் பரவி வைரலாகி வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்