நடிகர் விவேக்கின் கடைசி நிகழ்ச்சி இதுதான் !

Webdunia
திங்கள், 9 ஆகஸ்ட் 2021 (18:00 IST)
நடிகர் மிர்சி சிவாவுடன் விவேக் தொகுத்து வழங்கிய எங்க சிரி பாபபோம் என்ற காமெடி ரியாலிட்டி ஷோ ஒளிபரப்பாக உள்ளது. இது நடிகர் விவேக்ன் கடைசி நிகழ்ச்சி ஆகும்.

சினிமாவிலும் மக்களுக்கான சமுதாயக் கருத்துகளைக் கொண்டுசெல்லும் ஆயுதமாகப் கையாண்டு, அப்துல்கலாமின் சிந்தனைகளை இளைஞர்களிடமும், இயற்கையை காப்பாற்றும் விதமாக பல லட்சம் மரக்கன்றுகளை நட்டு சேவை செய்தவர் நடிகர் விவேக்.
அவர் கடந்த ஏப்ரல் மாதம் 17 ஆம் தேதி உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் உயிரிழந்தார்.

அவரது சமுதாயத்திற்கும், இளைஞர்களுக்கும், சினிமாத்துறைக்கும் மிகப்பெரிய இழப்பாகப் பார்க்கப்படுகிறது.

தமிழ் சினிமாவில் முன்னணி காமெடி நடிகராக அறியப்பட்ட விவேக் நடிப்பில் அரண்மனை  3 மற்றும் யாதும் ஊரே யாவரும் கேளீர் அகிய படங்கள் வெளியாக உள்ளது.
மேலும், நடிகர் மிர்சி சிவாவுடன் விவேக் தொகுத்து வழங்கிய எங்க சிரி பாப்[ஓம் என்ற காமெடி ரியாலிட்ரி ஷோ அமேசான் ஓடிடி தளத்தில் விரைவில் ஒளிப்பராக உள்ளது. இது அவரது ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இது அவரது கடைசி நிகழ்ச்சி என்பது குறிப்பிடத்தக்கது.
அடுத்த கட்டுரையில்