கோல்கீப்பருக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த சூப்பர் ஸ்டார் !

Webdunia
வியாழன், 12 ஆகஸ்ட் 2021 (21:50 IST)
மலையாள சினிமாவில் சூப்பர் ஸ்டார் மம்முட்டி. இவர் இந்திய ஹாக்கி அணி கோல்கீப்பர் வீட்டிற்கு சென்று இன்ப அதிர்ச்சி அளித்துள்ளார்.

சமீபத்தில் நடைபெற்று முடிந்த ஒலிம்பிக் போட்டியில், இந்திய ஆடவர் ஹாக்கி அணி வெண்கலப் பதக்கம் வென்று சாதித்தது.

இதற்கு முக்கிய காரணம் கோல்கீப்பர் ஸ்ரீஜேஷ். இவர் கேரள மாநிலத்தைச் சேர்ந்தவர் ஆவார். இவரது திறமையாலும் அக்குழுவினரின் ஒருங்கிணைப்பாலும் ஹாக்கி போட்டியில் பதக்கம் வென்றது. எனவே கேரள அரசு அவருக்கு ரூ.2 கோடி பரிசுத்தொகை அறிவித்துள்ளது.

இந்நிலையில், இன்று கோல்கீப்பர் ஸ்ரீஜேஷின் வீட்டிற்குச் சென்ற சூப்பர் ச்டார் மம்முட்டி அவருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் இன்ப அதிர்ச்சி அளித்தார். இதுகுறித்த புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்