லேடி சூப்பர் ஸ்டார் படத்தை பாராட்டிய சூப்பர் ஸ்டார் ரஜினி

Webdunia
செவ்வாய், 14 நவம்பர் 2017 (04:02 IST)
லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடித்த 'அறம்' படத்திற்கு பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் குவிந்து வருகிறது. இந்த படத்தை பாராட்டாத விமர்சகர்களும், பத்திரிகைகளும் இல்லை என்றே சொல்லும் அளவிற்கு எட்டு திக்கில் இருந்து பாராட்டுக்கள் வந்து கொண்டே இருக்கின்றது. குறிப்பாக நயன்தாராவும் இயக்குனர் கோபி நயினாரும் இந்த பாராட்டுக்களை எதிர்பார்க்கவே இல்லை என்று கூறலாம்


 


இந்த நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நேற்று இந்த படத்தை பார்த்தார். அவருக்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த சிறப்புக்காட்சியை குடும்பத்துடன் கண்டு ரசித்த ரஜினி படக்குழுவினர்களுக்கு பாராட்டு தெரிவித்தார். குறிப்பாக நயன்தாராவுக்கு அவர் ஸ்பெஷல் பாராட்டுக்களை தெரிவித்தார்

ரஜினியின் இந்த பாராட்டு குறித்து 'அறம்' படத்தின் தயாரிப்பு நிறுவனம் தனது டுவிட்டரில் தகவல் தெரிவித்துள்ளது. சூப்பர் ஸ்டார் ரஜினியின் பாராட்டு தங்களுக்கு பெரும் ஊக்கத்தை கொடுத்துள்ளதாக தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்