''ஓ சொல்றியா பாடலுக்கு'' சமந்தாவுடன் நடனமாடிய ஹீரோ!

Webdunia
புதன், 20 ஜூலை 2022 (18:28 IST)
தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகர் அல்லு அர்ஜூன். இவர் நடிப்பில் சுகுமார் இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளியான படம் புஷ்பா. இப்படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்திருந்தார். இப்படம் மிகப்பெரிய வெற்றியடைந்து ரூ.375 கோடிக்கு மேல் வசூலீட்டியது.

இப்படத்தில் இடம்பெற்ற ஓ சொல்றியா பாடலுக்கு நடிகை சமந்தா டான்ஸ் ஆடியிருந்தார். இப்பாடல் சர்ச்சை ஆனாலும் சூப்பர் ஹிட் ஆனது.

இந்த நிலையில், தற்போது இந்திப் படங்களில் சமந்தா நடித்து வருகிறார். ஒரு நிகழ்ச்சியில் நடிகர் அக்ஷய்குமாருடன் கலந்துகொண்ட சமந்தா, ஓ சொல்றியா பாடலுக்கு நடனம் ஆடினார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்