கொரோனாவில் இருந்து குணமடைந்த சரத்குமாரிடம் பாசத்தை பொழிந்த நாய்!

Webdunia
திங்கள், 4 ஜனவரி 2021 (14:29 IST)
உலக அளவில் கொரோனா தொற்றின் வீரியம் குறைந்தாலும் இன்னும் இத்தொற்றின் பாதிப்புகள் குறைந்தபாடில்லை. நாள்தோறும் உயிரிழப்புகளும், தொற்றில் அறிகுறிகளும் இருந்துகொண்டேதான் உள்ளது.
இத்தொற்று சாமானியர் முதற்கொண்டு, நடிகர்,செல்வந்தர் என அனைவருக்கும் வருவதால் அரசு கூறியுள்ளதன்படி நடந்துக்கொண்டால் தொற்றிலிருந்து விடுபடலாம். அரசும் இத்தொற்றைக் குறைக்கப் பல்வேறு நடவடிகைகளை எடுத்து வருகிறது.
 
கடந்த மாதம் 8ம் தேதி சமத்துவ மக்கள் கட்சியில் தலைவரும் நடிகருமான சரத்குமார் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு சிகிச்சை எடுத்து வந்தார். சிகிச்சைக்கு பின்னர் உடல் நலம் குணமாகி தொற்றிலிருந்து மீண்ட அவர் நேற்று ஒரு மாதத்திற்கு பின்னர் வீடு திரும்பினார். 
 
அப்போது அவர் வளர்த்து வரும் செல்ல நாய் அவரை கட்டியணைத்து பாசத்தை பொழிந்த வீடியோவை முகநூல் பக்கத்தில் வெளியிட்டு , "ஒரு மாதமாக என்னை பிரிந்திருந்த என் செல்ல தார் (Thor) கொரோனாவில் இருந்து குணமடைந்து நான் வீடு திரும்பிய பிறகு, அவனது எல்லையில்லா அன்பையும், பாசத்தையும் வெளிப்படுத்தி என்னுடன் விளையாடிய இனிமையான தருணம் என கூறி பதிவிட்டுள்ளார். இதோ அந்த வீடியோ..
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்