இலங்கையில் இருந்து சென்னை வருகிறது பவதாரிணி உடல்.. பிரேத பரிசோதனை நடத்த முடிவு..!

Siva
வெள்ளி, 26 ஜனவரி 2024 (07:11 IST)
இசைஞானி இளையராஜாவின் மகள் பவதாரிணி நேற்று இலங்கையில் காலமான நிலையில் அவருடைய உடல் இன்று மாலை சென்னை வர இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 
 
பாடகி பவதாரிணி புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் இலங்கையில் ஆயுர்வேத சிகிச்சைக்காக சென்றிருந்த நிலையில் சிகிச்சையின் பலன் இன்ரி காலமானார். இந்த நிலையில் மறைந்த பவதாரிணி உடல் இன்று மாலை சென்னை வர இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
 
இலங்கையில் தனியார் வைத்தியசாலையில் இருந்து கொழும்பில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு பவதாரிணி உடல் கொண்டு செல்லப்பட்டது என்றும், முழுவதும் மூடப்பட்ட பெட்டியில் வைக்கப்பட்ட பவதாரிணி உடல் இன்று சென்னை வரும் என்றும் தெரிகிறது.
 
மேலும் பிரேத பரிசோதனைக்கு பிறகு பவதாரணி உடல் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்படும் என்றும் கூறப்படுகிறது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்