இளம் பெண் உயிரைக் காப்பாற்ற ஆம்புலன்ஸ் விமானம் ஏற்பாடு செய்த நடிகர்

Webdunia
செவ்வாய், 4 மே 2021 (21:29 IST)
உத்தரபிரதேசத்தில் கொரொனாவா பாதிக்கப்பட்டு உயிருக்குப் போராடிய பெண்ணுக்கு ஆம்புலன்ஸ் விமானம் ஏற்பாடு செய்து அவரது உயிரைக் காப்பாற்றியுள்ளர் நடிகர் சோனு சூட்.

கொரோனா பெருந்தொற்றுக் காலத்தின்போது, புலம்பெயர் மக்கள், தொழிலாலர்கள்,வெளிநாட்டு மாணவர்கள், விவசாயிகள் , ஏழைகள், ஆகியோருக்கு பெரிதும் உதவியவர் சோனு சூட்.

உத்தரபிரதேசத்தில் கொரொனாவா பாதிக்கப்பட்டு உயிருக்குப் போராடிய பெண்ணைக்காப்பாற்ற தனது சொந்தச் செலவில் ஆம்புலன்ஸ் விமானம்  ஏற்பாடு செய்து கொடுத்துள்ளார் நடிகர் சோனு சூட். உபியில் உள்ள ஜான்சியில் வசித்து வருபவர் காயிலெஷ் அகர்வால். இவர் கொரொனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். ஆனால் அவரது உடல்நிலை மோசமானதால் வேறு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லுமாரு அவரது உறவினர்களிடம் மருத்துவர் கூறினர். பின்னர் நடிகர் சோனு சூட்டின் சமூக வலைதளத்தில் பெண்ணின் பெற்றோர் உதவி கேட்டுள்ளனர்.

இடையத்து ஹைதராபாத்தில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் இடம் இருப்பது தெரியவந்தது. பின்னர் ஆம்புலன்ஸ் விமானத்தில் அவரைக் கொண்டு வந்து சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது. இதனால் சோனுச் சூட்டிற்கு வாழ்த்துகள் குவிந்து வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்