200 கொரோனா நோயாளிகளின் உடல்களை கொண்டு சென்ற ஆம்புலன்ஸ் டிரைவர் பலி!

ஞாயிறு, 11 அக்டோபர் 2020 (12:41 IST)
ஒரு பக்கம் கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் மனித இனத்தையே அச்சுறுத்தி வரும் நிலையில் இன்னொரு பக்கம் கொரோனா வைரஸ்க்கு எதிராக சேவை செய்யும் சமூக ஆர்வலர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது 
 
அந்த வகையில் கடந்த ஆறு மாதங்களாக வீட்டிற்கு கூட செல்லாமல் ஆம்புலன்ஸில் தங்கி கொரோனாவால் இறந்தவர்களின் உடலை கொண்டு சென்று இறுதிச் சடங்கு செய்த ஆம்புலன்ஸ் டிரைவர் ஒருவர் கொரோனாவால் பலியானது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது 
 
கடந்த ஆறு மாதங்களாக வீட்டுக்கு செல்லாமல் ஆம்புலன்சில் தங்கி நோயாளிகளின் இறுதிச்சடங்கு செய்வதற்கு எடுத்துச் செல்லும் பணியில் ஈடுபட்டிருந்தவர் ஆம்புலன்ஸ் டிரைவர் டெல்லியை சேர்ந்த ஷஹீத் பகத்சிங் சேவா சங்கத்தை சேர்ந்த ஆரிப்கான். இவர் 200க்கும் மேற்பட்ட இறந்த கொரோனா நோயாளிகளின் உடல்களை எடுத்துச் சென்று இறுதிச்சடங்கு செய்துள்ளார். 
 
அதுமட்டுமின்றி இறுதிச்சடங்கு செய்ய பணம் இல்லாதவர்களுக்கு பண உதவி செய்ததோடு, உற்றார் உறவினர் இல்லாத உடலுக்கு அவரே இறுதிச் சடங்கும் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
 
அந்த வகையில் கொரோனாவுக்கு சேவை செய்த ஆம்புலன்ஸ் டிரைவர் அதே கொரோனாவுக்கு பலியாகி இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவரது சேவைக்கு வீரவணக்கங்கள் குவிந்து வருகிறது

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்