மெரினாவில் மகனை தொலைத்த இயக்குனர்!!

Webdunia
சனி, 21 ஜனவரி 2017 (11:52 IST)
இயக்குனர் தங்கர்பச்சான் ஜல்லிக்கட்டு போராட்டக் குழுவினரை சந்தித்து ஆதரவு தெரிவிப்பதற்காக மெரினா கடற்கரைக்கு காரில் வந்தார். 


 
 
காரை அவருடைய மகன் விஜித்பச்சான் (வயது 24) ஓட்டி வந்தார். காரில் இருந்து தங்கர்பச்சான் இறங்கிவிட்டார். அவருடைய மகன் விஜித்பச்சான் காரை பார்க்கிங் செய்துவிட்டு வருவதாக கூறி சென்றார்.
 
இந்நிலையில் இளைஞர்கள் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்துவிட்டு தங்கர்பச்சான் வெளியே வந்து, மகனுக்காக காத்திருந்தார். நீண்ட நேரம் ஆகியும் அவர் வரவில்லை. 
 
பலமுறை செல்போனில் தொடர்புகொண்டும் விஜித்பச்சானின் செல்போன் இணைப்பு கிடைக்கவில்லை. பின்னர் ‘மைக்’ மூலம் கூட்டத்தை கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டிருந்த இளைஞர்களிடம், உதவி கேட்டார். 
 
இருந்தாலும், தங்கர்பச்சான் செல்போன் மூலம் அவரை தொடர்பு கொள்ள முயற்சி செய்துகொண்டே இருந்தார். பின்னர், விஜித்பச்சானின் செல்போன் இணைப்பு கிடைத்து இருவரும் சந்தித்துக்கொண்டனர்.
அடுத்த கட்டுரையில்