இந்த படத்துக்கு ஜி வி பிரகாஷ் இசையமைக்கிறார். தெலுங்கு சினிமாவின் முன்னணி தயாரிப்பு நிறுவனமான மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. படத்தில் சுனில், அர்ஜுன் தாஸ், பிரசன்னா மற்றும் த்ரிஷா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.
இந்நிலையில் நேற்று படத்தில் த்ரிஷாவின் கதாபாத்திர அறிமுக வீடியோ வெளியானது. அதில் த்ரிஷா ரம்யா என்ற கதாபாத்திரத்தில் நடிப்பதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கிய த்ரிஷா இல்லனா நயன்தாரா, அ அ அ, மார்க் ஆண்டனி ஆகிய பெருவாரியான படங்களில் அவர் தன் கதாநாயகிக்கு ரம்யா என்ற பெயரைதான் வைப்பதாக ரசிகர்கள் கண்டுபிடித்து டிகோட் செய்துள்ளனர்.