தங்கலான் ஓடிடி ரிலீஸ்…நெட்பிளிக்ஸ் செய்யும் பிரச்சனை… தாமதத்துக்கு இதுதான் காரணமா?

vinoth
சனி, 5 அக்டோபர் 2024 (11:16 IST)
பா ரஞ்சித் இயக்கத்தில் கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக உருவாக்கத்தில் இருந்த ‘தங்கலான்’ படம் ஆகஸ்ட் 15 ஆம் தேதி உலகமெங்கும் ரிலீஸ் ஆனது. இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகமாக இருந்த நிலையில் படத்துக்கு விமர்சன ரீதியாக பாராட்டுகள் கிடைத்தாலும், வசூல் ரீதியாக மிகப்பெரிய வெற்றியை தங்கலான் பெறவில்லை என்று சொல்லப்படுகிறது.

படம் ரிலீஸாகி 50 நாட்களைக் கடந்தும் இன்னும் ஓடிடியில் ரிலீஸாகவில்லை. செப்டம்பர் 20 ஆம் தேதி நெட்பிளிக்ஸ் தளத்தில் இந்த படம் வெளியாகும் என சொல்லப்பட்டது. ஆனால் அந்த தேதியில் படம் ரிலீஸாகவில்லை. இதற்குக் காரணம் படத்தை வாங்கிய நெட்பிளிக்ஸ் நிறுவனம்தான் என்று சொல்லப்படுகிறது.

படத்தை 60 கோடி ரூபாய்க்கு வாங்கியது நெட்பிளிக்ஸ். ஆனால் படம் திரையரங்குகளில் எதிர்பார்த்த வெற்றியைப் பெறாததால் இப்போது அந்த தொகையைக் குறைக்க பார்க்கிறதாம். இது சம்மந்தமாக தற்போது தயாரிப்பாளருக்கும் நெட்பிளிக்ஸ் நிறுவனத்துக்கும் இடையே பேச்சுவார்த்தை நடந்துவரும் நிலையில் இன்னும் சுமூக முடிவு எடுக்கப்படவில்லை என சொல்லப்படுகிறது. அதனால்தான் படம் இன்னும் ஓடிடியில் ரிலீஸாகவில்லை என சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்