‘ரஞ்சித்தின் சினிமாவில் மூழ்கி விட்டேன்’… இயக்குனர் சி எஸ் அமுதன் பாராட்டு!

vinoth
புதன், 21 ஆகஸ்ட் 2024 (08:13 IST)
பா ரஞ்சித் இயக்கத்தில் கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக உருவாக்கத்தில் இருந்த ‘தங்கலான்’ படம் ஆகஸ்ட் 15 ஆம் தேதி உலகமெங்கும் ரிலீஸ் ஆனது. இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகமாக இருந்த நிலையில் முதல் நாளில் தமிழ் நாட்டில் மிகப்பெரிய அளவில் ரசிகர்களின் ஆதரவு கிடைத்தது. அடுத்தடுத்த நாட்களிலும் ஹவுஸ்ஃபுல்லாகி படம் வசூலில் கலக்கியது.

படம் விரைவில் 100 கோடி ரூபாய் வசூலைத் தொடும் என சொல்லப்படுகிறது. படத்தை ரசிகர்கள் மட்டுமின்றி திரையுலகைச் சேர்ந்த கலைஞர்களும் பாராட்டிவருகின்றனர். அந்த வரிசையில் இப்போது தமிழ்ப் படம் இயக்குனர் சி எஸ் அமுதனும் இணைந்துள்ளார்.

அவரின் சமூகவலைதளப் பதிவில் “இயக்குனர் ரஞ்சித், சினிமா மீது வைத்துள்ள காதல்தான் ‘தங்கலான்’ படமாக வந்துள்ளது. அவரின் உலகத்தில் மூழ்கிவிட்டேன். நம் சமூகத்தை புராணங்களில் வரும் ராஜாக்களோ அல்லது ராணிகளோ உருவாக்கவில்லை, மாறாக மக்களின் வியர்வையும் ரத்தமும்தான் உருவாக்கியுள்ளது.  சிலக் காட்சிகள் அற்புதமான சினிமா அனுபவத்தைக் கொடுத்தன. படத்தில் நடித்த அனைவரும் கதாபாத்திரங்களாகவே வாழ்ந்துள்ளனர்” எனக் கூறியுள்ளார்.
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்