தனுஷின் 52வது படத்தின் டைட்டில் இதுதான்.. இசையமைப்பாளர் யார்?

Siva

வியாழன், 19 செப்டம்பர் 2024 (17:13 IST)
தனுஷ் இயக்கத்தில் உருவாகும் நான்காவது படம்   படம் குறித்து இன்று மாலை வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், இந்த படத்தின் டைட்டிலுடன் கூடிய முதல் லுக் போஸ்டர் வெளியாகி இணையத்தில் வைரலாகி உள்ளது. இந்த படம் தனுஷ் நடிக்கும் 52வது படம் என்பது குறிப்பிடத்தக்கது.
 
தனுசு நடித்த ஐம்பதாவது திரைப்படம், ’ராயன்’ மிகப்பெரிய வெற்றியை பெற்றது என்பது தெரிந்ததே. மேலும் அவர் நடிக்கும் 51ஆவது படம், 'குபேரா', படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்த நிலையில் தனுஷ்  தனது 52ஆவது படத்தில் நடிப்பது மட்டுமின்றி அவரே இயக்கவுள்ளார். ஏற்கனவே  பா பாண்டி, ராயன், நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் போன்ற படங்களை இயக்கிய நிலையில் இந்த படம் அவரது இயக்கத்தில் உருவாகும் இது நான்காவது படம்.
 
இந்நிலையில் தனுஷின் 52வது படத்தின் டைட்டில் 'இட்லி கடை' என்று தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது. ஜிவி பிரகாஷ் இசையமைப்பில், பிரசன்னா ஜிகே ஒளிப்பதிவில் உருவாகும் இந்த படத்தை டான் பிக்சர்ஸ் நிறுவனம் மற்றும் வொண்டர் பார் பிலிம்ஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கவிருக்கின்றன. இந்த படத்தில் நடிக்கும் மற்ற நட்சத்திரங்களைப் பற்றிய விவரங்கள் விரைவில் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 
Edited by Siva
 

#D52 #DD4 Om Namashivaaya ????♥️ @RedGiantMovies_ @DawnPicturesOff @Aakashbaskarann @wunderbarfilms @theSreyas @gvprakash @editor_prasanna pic.twitter.com/o2QsS4FGOr

— Dhanush (@dhanushkraja) September 19, 2024
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்