‘இந்தியன் 2’ படத்தில் இணைந்த இன்னொரு பிரபலம்

Webdunia
புதன், 30 மே 2018 (13:30 IST)
‘இந்தியன் 2’ படத்தில் பிரபல பாடலாசிரியர் தாமரை இணைந்துள்ளார்.



ஷங்கர் இயக்கத்தில் 1996ஆம் ஆண்டு ரிலீஸான படம் ‘இந்தியன்’. கமல்ஹாசன் இரண்டு வேடங்களில் நடித்த இந்தப் படத்தில், அவருக்கு ஜோடியாக சுகன்யா மற்றும் மனிஷா கொய்ராலா நடித்தனர். கவுண்டமணி - செந்தில் காமெடி இந்தப் படத்தில் பிரமாதமாக இருக்கும். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருந்தார்.

இந்தப் படத்தின் இரண்டாம் பாகம் தயாராகப் போகிறது என கடந்த வருடம் ஒளிபரப்பான ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. ஷங்கர் இயக்கத்தில் கமல் நடிக்கும் இந்தப் படத்தை லைகா புரொடக்‌ஷன்ஸ் தயாரிக்கிறது. ‘பிக் பாஸ்’ முடிந்தபிறகு இந்த வருட இறுதியில் ஷூட்டிங் போகலாம் என்கிறார்கள்.



இந்நிலையில், பிரபல பாடலாசிரியரான தாமரை, இந்தப் படத்தில் பாடல்கள் எழுத ஒப்பந்தமாகியுள்ளார். இதுதான் ஷங்கர் - தாமரை இணையும் முதல் படம் என்பது குறிப்பிடத்தக்கது. எழுத்தாளர்கள் ஜெயமோகன், கபிலன் வைரமுத்து, லட்சுமி சரவணகுமார் ஆகியோர் இணைந்து இந்தப் படத்துக்கு வசனம் எழுதுகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்