விஜய்யின் ‘ஜனநாயகன்’ ரிலீஸ் தேதி அறிவிப்பு.. 10 நாட்கள் தொடர் விடுமுறையா?

Siva
செவ்வாய், 25 மார்ச் 2025 (07:33 IST)
தளபதி விஜய் நடிக்கும் "ஜனநாயகன்" திரைப்படத்தின் படப்பிடிப்பு முழு வீச்சில் நடைபெற்று வரும் நிலையில், இதன் ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.  

விஜய் நடிப்பில், ஹெச்.வினோத் இயக்கத்தில், கே.வி.என். புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் உருவாகும் "ஜனநாயகன்", திரைப்படம் அனிருத் இசையில் தயாராகி வருகிறது. கடந்த சில மாதங்களாகவே படப்பிடிப்பு நடைபெற்று வந்த நிலையில், தற்போது இறுதிக்கட்ட வேலைகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இன்னும் சில வாரங்களில் படப்பிடிப்பு முடிவடையும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.  

இதுவே விஜய்யின் கடைசி படம் என்பதால், ரசிகர்கள் பெரிய எதிர்பார்ப்புடன் உள்ளனர். பொங்கல் வெளியீடாக இப்படம் திரைக்கு வரலாம் என கூறப்பட்ட நிலையில், தயாரிப்பு குழுவினர் தற்போது ஜனவரி 9, 2025 என வெளியீட்டு தேதியை உறுதி செய்துள்ளனர். ஜனவரி 9 முதல் தொடர்ச்சியாக பொங்கல் விடுமுறை கிட்டத்தட்ட 10 நாட்கள் என்பதால் இந்த படம் சாதனை வசூல் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

விஜய் ஜோடியாக பூஜா ஹெக்டே  நடிக்கும் இந்தப் படத்தில், முக்கிய  கதாபாத்திரத்தில் பாபி தியோல் நடிக்கிறார். மேலும், மமிதா பாஜு, பிரியாமணி, கௌதம் வாசுதேவ் மேனன், பிரகாஷ் ராஜ் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்