'வாரிசு’ படத்தின் புதிய போஸ்டர்: அட்டகாசமான போஸில் விஜய்-ராஷ்மிகா!

Webdunia
சனி, 5 நவம்பர் 2022 (11:30 IST)
தளபதி விஜய் நடித்து முடித்திருக்கும் 'வாரிசு’ திரைப்படம் வரும் பொங்கல் நாளில் வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் போஸ்ட் புரடொக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன 
 
இந்த நிலையில் இந்த படத்தின் சிங்கிள் பாடல் இன்று மாலை 5.30  மணிக்கு வெளியாகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டது என்பதும், இந்த படத்தின் பாடலிம் புரமோ வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது
 
இந்த நிலையில் ‘வாரிசு’  படக்குழுவினரின் புதிய போஸ்டரை வெளியிட்டுள்ளனர். இந்த போஸ்டரில் விஜய் மற்றும் ராஷ்மிகா மந்தனா அட்டகாசமான போஸ் கொடுக்கும் காட்சிகள் உள்ளன. இந்த போஸ்டரை விஜய் ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது
 
விஜய், ராஷ்மிகா மந்தனா பிரகாஷ்ராஜ், சரத்குமார், ஷாம், யோகிபாபு, பிரபு, ஜெயசுதா, ஸ்ரீகாந்த், சங்கீதா, சம்யுக்தா, உள்பட பலர் நடித்து வரும் இந்த படம்  கார்த்திக் பழனி ஒளிப்பதிவில், பிரவிண் கே.எல் படத்தொகுப்பில் உருவாகி வருகிறது. தில் ராஜூ தயாரிப்பில் வம்சி இயக்கத்தில் உருவாகியிருக்கும் இந்த படம் தமிழ், தெலுங்கு மொழிகளில் உருவாகி வருகிறது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்