வாரிசு படமும் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம்தான் ரிலீஸ் ஆகிறதா?

வியாழன், 3 நவம்பர் 2022 (15:32 IST)
விஜய் நடித்து வரும் வாரிசு படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. விஜய்யுடன் ராஷ்மிகா மந்தனா, பிரபு, பிரகாஷ் ராஜ் மற்றும் ஜெயசுதா ஆகியோர் நடிப்பதை படக்குழு உறுதி செய்துள்ளது. இந்த படம் 2023 ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரிலீஸ் ஆகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

வாரிசு ரிலீஸ் ஆகும் அதே நாளில்தான் அஜித்தின் துணிவு திரைப்படமும் ரிலீஸ் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது. துணிவு படத்தை உதயநிதியின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் வெளியிடுகிறது.

வாரிசு திரைப்படத்தை மாஸ்டர் தயாரிப்பாளர் லலித் வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் வாரிசு படமும் லலித் மூலமாக ரெட் ஜெயண்ட் மூவிஸ் வெளியீடாகதான் வரும் என்று சொல்லப்படுகிறது. அதற்கான பேச்சுவார்த்தைகள் தொடங்கியுள்ளதாக சொல்லப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்