’தளபதி 68’ படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் எப்போது? அதிகாரபூர்வமாக அறிவித்த தயாரிப்பாளர்..!

Webdunia
ஞாயிறு, 31 டிசம்பர் 2023 (12:14 IST)
தளபதி விஜய் நடிப்பில், வெங்கட் பிரபு இயக்கத்தில், யுவன் சங்கர் ராஜா இசையில், ஏஜிஎஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ’தளபதி 68’. இந்த படத்திற்கு G.O.A.T என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது 
 
 இந்த நிலையில் சற்றுமுன் இந்த படத்தின் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி தனது சமூக வலைதளத்தில் தளபதி 68 படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் என்றும் மாலை 6 மணிக்கு வெளியாகும் என்று அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பு விஜய் ரசிகர்களுக்கு புத்தாண்டு சிறப்பு பரிசாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
இன்றும் மாலை வெளியாகும் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டரில் G.O.A.T என்ற டைட்டில் தான் வைக்கப்பட்டுள்ளதா அல்லது வேறு டைட்டிலா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம் 
 
மேலும் இந்த படத்தில் விஜய் இரண்டு வேடங்களில் நடித்திருப்பதாக கூறப்படும் நிலையில் இரண்டு விதமான கெட்டப்புகளும் இன்றைய போஸ்டரில் இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
 
விஜய், பிரபுதேவா, பிரசாந்த், மோகன், சினேகா, லைலா, மீனாட்சி சவுத்ரி, பிரேம்ஜி உள்ளிட்ட பலர் இந்த படத்தில் நடித்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்