அதன்பின்னர், கஜினி, சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் இணைந்து சந்திரமுகி, விஜயுடன் இணைந்து சிவகாசி உள்ளிட்ட பல படங்களில் நடித்து முன்னணி நடிகையாக உயர்ந்தார்.
இந்த நிலையில், சினிமாவில் அறிமுகமாகி 20 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நயன்தாராவுக்கு ரசிகர்கள், சினிமாத்துறையினர் பாராட்டி வாழ்த்துகள் கூறி வருகின்றானர்.
இதுகுறித்து நயன்தாரா தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில், ரசிகர்களாகிய உங்களுக்குத்தான் இந்தக் கடிதம். நான் சினிமாவில் 20 ஆண்டுகள் நிலைத்து நிற்பதற்கு நீங்கள்தான் காரணம். நீங்கள் அளித்த உத்வேகத்தினால் தான் நான் கீழே விருந்தாலும் மேல எழ காரணமாக அமைந்தது. நீங்களின்றி இப்பயணம் முழுமையடையாது. என் ஒவ்வொரு படத்தின் வெற்றிக்கும் நீங்களே காரணம்….உங்களின் ஆதரவினால்தான் 20 ஆண்டுளாக நான் வெற்றியை நான் கொண்டாட காரணம் என்று நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.