நெல்லை மக்களை நேரில் சந்திக்கிறார் விஜய்! வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம்..!

சனி, 30 டிசம்பர் 2023 (10:50 IST)
நெல்லை உள்பட நான்கு மாவட்டங்களில் சமீபத்தில் பெய்த கன மழை காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது என்பதும் இதனால் லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டனர் என்பதையும் பார்த்தோம் 
 
இந்த நிலையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மத்திய மற்றும் மாநில அரசு நிவாரண உதவி செய்து வரும் நிலையில் தற்போது நடிகர் விஜய்யும் வெள்ள நிவாரண உதவி செய்ய முன்வந்துள்ளார்.
 
தூத்துக்குடி நெல்லை மாவட்டங்களில் பெய்த கனமழையால் பாதிக்கப்பட்ட மக்களை இன்று சந்தித்து  நலத்திட்ட உதவிகளையும் விஜய் வழங்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது  
 
நெல்லை கேடிசி நகரில் உள்ள மாதா மஹாலில் நடைபெறும் இந்த நிகழ்ச்சிக்கு தூத்துக்குடியில் இருந்து 400க்கும் மேற்பட்ட பாதிக்கப்பட்ட பொதுமக்கள் அழைத்துச் செல்லப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்