'விஸ்வாசம்' இசை வெளியீடு தேதி அறிவிப்பு

Webdunia
ஞாயிறு, 16 டிசம்பர் 2018 (09:37 IST)
தல அஜித், நயன்தாரா நடிப்பில் சிவா இயக்கத்தில் டி.இமான் இசையில் உருவாகியுள்ள 'விஸ்வாசம்' படத்தின் 'அடிச்சு தூக்கு' மற்றும் 'வேட்டி கட்டு' பாடல்கள் ஏற்கனவே வெளியாகி யூடியூப் இணையதளத்தில் பல சாதனைகளை செய்து வரும் நிலையில் இந்த படத்தின் இசை வெளியீடு குறித்த தகவலை படக்குழு அறிவித்துள்ளது.

விஸ்வாசம்' படத்தின் பாடல்கள் அனைத்தும் இன்று வெளியாகவுள்ளதாக இந்த படத்தின் ஆடியோ உரிமை பெற்றுள்ள லஹரி நிறுவனம் தனது டுவிட்டரில் அறிவித்துள்ளது. ஆனால் அதே நேரத்தில் இசை வெளியீட்டு விழா எதுவும் இன்றி வழக்கம்போல் இணையதளத்தில் வெளிவரவுள்ளது.

இந்த படத்திற்காக டி.இமான் ஐந்து பாடல்கள் கம்போஸ் செய்திருப்பதாக கூறப்படும் நிலையில் ஏற்கனவே வெளியான இரண்டு பாடல்கள் தவிர மீதியுள்ள மூன்று பாடல்களை இன்று அஜித் ரசிகர்கள் கேட்க வாய்ப்பு உள்ளது. இந்த செய்தி வெளியான அடுத்த நிமிடமே டுவிட்டரில் இதுகுறித்த ஹேஷ்டேக் ஒன்று டிரண்டுக்கு வந்துவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்