முன்னணி நடிகைகளுக்கு செக் வைத்து புரொமோஷன் வாங்கிய நித்யா மேனன்!

சனி, 15 டிசம்பர் 2018 (18:23 IST)
தனக்கு கொடுக்கப்படும் அத்தனை  கதாபாத்திரங்களையும் அவ்வளவு  சிறப்பாகவும் கச்சிதமாகவும் செய்து முடிக்கும் நடிகைகளில் முக்கியமானவர் நடிகை நித்யா மேனன். 


 
மெர்சல் படத்தில் தன் அற்புதமான நடிப்பை வெளிப்படுத்திய நித்யா மேனனை பல இயக்குனர்கள் குறி வைத்து தூண்டில் போட முயற்சி செய்தனர். ஆனால் எதிலும் மாட்டிக்கொள்ளாமல் சிறிய இடைவெளி விட்டு தனக்கான கதாபாத்திரத்திற்காக காத்திருந்த நித்யா மேனனுக்கு அடித்தது ட்ரிபிள் தமாகா லக். அந்த வகையில் இவர் தற்போது ப்ரானா, சைக்கோ, தி அயர்ன் லேடி ஆகிய திரைப்படங்களில் நடித்து வருகிறார். 
 
இதில் ப்ரானா படத்தை இயக்குநர் வி.கே பிரகாஷ் இயக்குகிறார். இந்தப் படத்தில் ஒளிப்பதிவாளராக பி.சி.ஶ்ரீராமும், சவுண்ட் மிக்ஸராக ரசூல் பூக்குட்டியும் பணியாற்றுகிறார்கள். 
 
தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என நான்கு மொழிகளில் இந்தப் படம் இயக்கப்பட்டுள்ளது. தவிர இதில் துல்கர் சல்மானும், நானியும் சிறப்புத் தோற்றத்தில் நடித்திருக்கிறார்கள். பொங்கலை முன்னிட்டு வரும் ஜனவரி 11-ம் தேதி ப்ரானா வெளியிடப்பட உள்ளது. 
 
இந்நிலையில் தற்போது இதன் புரொமோஷன் வேலைகள் விறு விறுப்பாக நடந்து வருவதாக, நித்யா மேனன் அவரது ட்விட்டரில் தெரிவித்திருக்கிறார். 
 
இதோ ட்விட்டர் லிங்க் 
 

At promotions of #Prana.. Finally..! @pcsreeram @resulp https://t.co/HDhYq6GSoM

— Nithya Menen (@MenenNithya) December 15, 2018

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்