தல அஜித்தின் அட்டகாசமான 'விவேகம்' படத்தின் அடுத்த ஸ்டில்

Webdunia
வியாழன், 6 ஏப்ரல் 2017 (00:06 IST)
தல அஜித் நடித்து வரும் 'விவேகம்' படத்தின் படப்பிடிப்பு பல்கேரியாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் சற்று நேரத்திற்கு முன்னர் திடீரென இந்த படத்தின் புதிய போஸ்டர் இன்று நள்ளிரவு 12.01க்கு வெளியாகவுள்ளதாக வெளிவந்த தகவலால் சமூக வலைத்தளங்கள் சுறுசுறுப்பாகியது.



 


தல அஜித் ரசிகர்கள் #VivegamNewPicTonight என்ற ஹேஷ்டேக்கை உருவாக்கி அதை உலக அளவில் டிரெண்ட் ஆக்கினர்.

இந்த நிலையில் தல அஜித்தின் அட்டகாசமாக ஸ்டில் சற்று முன்னர் வெளியாகியது. கையில் இரும்பு ஆயுதம் ஒன்றை வைத்து கொண்டு அட்டகாசமாக நிற்கும் தல அஜித்தின் ஸ்டில் ஆச்சரியப்பட வைக்கும் அளவுக்கு உள்ளதாக தல ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
 
அடுத்த கட்டுரையில்