அஜித் நடித்த குட் பேட் அக்லி படம் கடந்த வியாழக்கிழமை உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகி, ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்நிலையில், இந்த படம் பாசிட்டிவ் விமர்சனங்களைப் பெற்று வருகிறது.
அதன் பின்னர் ஞாயிற்றுக் கிழமையிலும் வசூலில் நல்ல முன்னேற்றம் தெரிந்தது. இந்நிலையில் முதல் நான்கு நாட்களில் இந்தியாவில் மட்டும் இந்த படம் சுமார் 80 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்துள்ளதாகவும், உலகளவில் வசூல் 150 கோடி ரூபாயாக இருக்கும் எனவும் சொல்லப்படுகிறது. இதன் மூலம் குட் பேட் அக்லி திரைப்படம் ப்ளாக்பஸ்டர் லிஸ்ட்டில் இணைந்துள்ளதாக சொல்லப்படுகிறது. இன்று விடுமுறை நாள் என்பதால் இன்றும் படத்துக்கு நல்ல வசூல் இருக்கும் என சொல்லப்படுகிறது.