ரிலீசுக்கு முன்பே மணிரத்னம் படத்திற்கு கிடைத்த மாபெரும் பரிசு

Webdunia
புதன், 5 ஏப்ரல் 2017 (22:40 IST)
பிரபல இயக்குனர் மணிரத்னம் இயக்கிய 'காற்று வெளியிடை திரைப்படம் வரும் வெள்ளி முதல் உலகம் முழுவதும் பிரமாண்டமாக வெளியாகவுள்ளது. தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளில் வெளியாகவுள்ள இந்த படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு எற்பட்டுள்ள நிலையில் இந்த படத்திற்கு தற்போது மகத்தான செய்தி ஒன்று கிடைத்துள்ளது.



 


அதாவது இந்த படத்திற்கு தமிழக அரசின் 30% வரிவிலக்கு கிடைத்துள்ளது. இந்த தகவல் மணிரத்னம் உள்பட படக்குழுவினர்களுக்கு கிடைத்த மாபெரும் பரிசாக கருதப்படுகிறது. மேலும் இந்த படத்திற்கான முன்பதிவு மிகவும் விறுவிறுப்பாக நடந்து வருவதாகவும் இதுவரை இல்லாத வகையில் மிகப்பெரிய ஓப்பனிங் வசூலை இந்த படம் பெறும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

கார்த்தி, அதிதிராவ் ஹைதி நடித்துள்ள இந்த படம் இந்த ஆண்டு மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள படங்களில் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ள இந்த படத்தை மணிரத்னம் அவர்களின் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இந்த படத்தை தமிழகம் முழுவதும் ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் ரிலீஸ் செய்கிறது.
அடுத்த கட்டுரையில்