தொலைக்காட்சி நடிகை கார் விபத்தில் மரணம்: போதையுடன் கார் ஓட்டியது காரணமா?

Webdunia
திங்கள், 21 மார்ச் 2022 (14:50 IST)
தொலைக்காட்சி நடிகை கார் விபத்தில் மரணம்: போதையுடன் கார் ஓட்டியது காரணமா?
பிரபல தொலைக்காட்சி மற்றும் வெப்தொடர்களில் நடித்த நடிகை ஒருவர் கார் விபத்தில் மரணமடைந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது
 
பிரபல தொலைக்காட்சி தொடர்களிலும் வெப் தொடர்களிலும் நடித்து வருபவர் காயத்ரி என்ற தெலுங்கு நடிகை. இவர் தனது ஆண் நண்பர் ரோகித் என்பவருடன் காரில் சென்று கொண்டிருந்தபோது திடீரென அந்த கார் விபத்துக்குள்ளானதாக தெரிகிறது
 
காரை ஓட்டிய ரோகித் மது போதையில் இருந்ததாக கூறப்படுகிறது. அவர் வேகமாக காரை ஓட்டியபோது மகேஸ்வரி என்ற பெண்ணின் மீது மோதி விபத்துக்குள்ளாகியதாகவும், இந்த விபத்தில் மகேஸ்வரி மற்றும் காரில் இருந்த காயத்ரி இருவரும் சம்பவ இடத்திலேயே மரணம் அடைந்ததாகவும் கூறப்படுகிறது
 
ரோகித் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த விபத்து குறித்து காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்
 
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்