ராகு- கேது காயத்ரி மந்திரங்களை தெரிந்துக்கொள்வோம் !!

திங்கள், 21 மார்ச் 2022 (11:07 IST)
நிழல் கிரகங்களான ராகுவும் கேதுவும் இடப்பெயர்ச்சி ஆக உள்ளன. ரிஷப ராசியில் உள்ள ராகு மேஷ ராசிக்கும் விருச்சிக ராசியில் உள்ள கேது துலாம் ராசிக்கும் இடப்பெயர்ச்சி அடைகின்றனர்.


ராகுவும் கேதுவும் ஒவ்வொரு ராசியிலும் ஒன்றறை ஆண்டுகள் தங்கி சுப அசுப பலன்களைத் தருவார்கள். ஜனன ஜாதகத்தில் ராகு கேது 3, 6, 11 ,ஆகிய இடங்களில் நல்ல பலனை தரக்கூடியவை. ராகு கேதுவுக்கு 3, 7, 11, பார்வைகள் விசேசமானது.

1. ராகு - ஸ்லோகம்:

(ராகு காலத்தில் பூஜிக்கவும்)

அர்த்த காயம் மகா வீர்யம்
சந்திராத்ய விமர்தநம்
சிம்ஹிகா கர்ப்ப ஸம்பூதம்
தம் ராகும் ப்ரணமாம்யஹம்

ராகு காயத்ரி மந்திரம்:

ஓம் நாகத்வஜாய வித்மஹே!
பத்ம அஸ்தாய தீமஹி!
தன்னோ ராகு ப்ரசோதயாத்!!!

2. கேது - ஸ்லோகம்:

(எம கண்டத்தில் பூஜிக்கவும்)

பலாஸ புஷ்ப ஸங்காஸம்
தாரகா கிரக மஸ்தகம்
ரௌத்ரம் ரௌத்ராத் மகம் கோரம்
தம் கேதும் ப்ரணமாம்யஹம்

கேது காயத்ரி மந்திரம்:

ஓம் அஸ்வத்வஜயா வித்மஹே!
சூலஹஸ்தாய தீமஹி!
தன்னக் கேதுஹ் ப்ரசோதயாத்!!!

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்