தயாரிப்பு நிறுவனம் தொடங்கிய நடிகை டாப்ஸி! – முதல் படம் என்ன?

Webdunia
வியாழன், 15 ஜூலை 2021 (13:33 IST)
பிரபல நடிகை டாப்ஸி படங்களில் நடிப்பதை தாண்டி சொந்தமாக தயாரிப்பு நிறுவனம் ஒன்றை தொடங்கியுள்ளார்.

தெலுங்கு நடிகையான டாப்ஸி “ஆடுகளம்” மூலமாக தமிழில் அறிமுகமானார். பின்னர் பல மொழி படங்களில் நடித்து வந்த அவர் தற்போது இந்தி சினிமாவில் பிஸியாக நடித்து வருகிறார். சமீபத்தில் இவர் நடித்த ஹசீன் தில்ருபா திரைப்படம் ஓடிடியில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.

இந்நிலையில் தனது நண்பருடன் இணைந்து புதிய தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கியுள்ளார் டாப்ஸி. இந்த தயாரிப்பு நிறுவனத்திற்கு “அவுட்சைடர்ஸ் பிலிம்ஸ்” என்று பெயர் வைத்துள்ள நிலையில் முதல் படமாக டாப்ஸி நடிக்கும் படமே தயாராகி வருகிறது. ”ப்ளர்” என்ற அந்த படத்தில் டாப்ஸி நாயகியாக நடிக்க அஜய் பாஹ்ல் படத்தை இயக்குகிறார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்