2.0 படத்தின் டைட்டிலை திடீரென மாற்றிய இயக்குனர்

Webdunia
வியாழன், 21 ஜூன் 2018 (13:31 IST)
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கி வரும் திரைப்படம் '2.0' என்பது தெரிந்ததே. இந்த நிலையில் சிவா நடிப்பில் சி.எஸ்.அமுதன் இயக்கத்தில் உருவாகியுள்ள படத்தின் டைட்டிலும் 'தமிழ்ப்படம் 2.0' என்று வைக்கப்பட்டிருந்தது. அதுமட்டுமின்றி ரஜினியின் '2.0' படத்தை கலாய்க்கும் வகையிலும் சில கருத்துக்கள் 'தமிழ்ப்படம் 2.0' படக்குழுவினர் கூறியிருந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
 
இந்த நிலையில் தற்போது 'தமிழ்ப்படம் 2.0' திரைப்படத்தின் டைட்டில் 'தமிழ்ப்படம் 2' என்று மாற்றப்பட்டுள்ளது. புள்ளிக்கு பின்னர் உள்ள ஜீரோவுக்கு மதிப்பில்லை என்ற கணித கோட்பாட்டின்படி அந்த ஜீரோவை படத்தின் டைட்டில் இருந்து தூக்கிவிட்டதாக இயக்குனர் தெரிவித்துள்ளார்.
 
ஒய்நாட் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்திருக்கும் இந்த படத்தின் டீசர் சமீபத்தில் வெளிவந்து ரஜினியின் 'கபாலி' டிரைலரைவிட இணையத்தில் வரவேற்பு பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. சிவா முக்கிய வேடத்தில் நடித்திருக்கும் இந்த படத்தில் திஷா பாண்டே, ஐஸ்வர்யா மேனன் என இரண்டு ஹீரோயின்களும் கஸ்தூரி ஒரு குத்துப்பாட்டிலும் நடித்துள்ளனர். மேலும் இந்த படத்தில் சதீஷ், சந்தானபாரதி, மனோபாலா, ஆர்.சுந்தர்ராஜன், நிழல்கள் ரவி  என பலர் நடித்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்