பிரதமர் நரேந்திர மோடியின் வேண்டுகோளை ஏற்று, ஜூன் 21-ந் தேதியை சர்வதேச யோகா தினமாக ஐ.நா. பொதுச்சபை கடந்த 2015-ம் ஆண்டு டிசம்பர் மாதம் அறிவித்தது. இதனையடுத்து, ஒவ்வொரு ஆண்டும் சர்வதேச யோகா தினம் விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்தியா மட்டுமின்றி, உலகின் பல நாடுகளிலும் அன்றைய தினம் யோகா பயிற்சி மேற்கொள்ளப்பட்டது.